ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் உதிரி பாகங்கள் விலை குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் அமர்வின் போது, ​​டிவிக்கள், ஸ்மார்ட்போன்கள், சுருக்கப்பட்ட எரிவாயு, இறால் தீவனம் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன, அதேசமயம் சிகரெட், விமானப் பயணம் மற்றும் ஜவுளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி
15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 6.4 சதவீதம் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அமோசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திற்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 35 சதவீதம குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்