பட்ஜெட்டில் கூட்டாட்சி தத்துவம் புறக்கணிப்பு: காங். கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு

டெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் கூட்டாட்சி தத்துவத்தையே பாஜக அரசு புறக்கணித்துவிட்டது என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திரா, பீகாருக்கு கூடுதல் நிதி கொடுத்ததை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கான நியாயத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என அவர் கூறினார்.

 

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு