ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல்!

ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், புதிய பிளானை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில், தொலைதொடர்பு நிறுவனங்களில் முதன்மையானவை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா. இதில் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியது. செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவிகிதம் வரை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதனை தொடர்ந்து மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 11 முதல் 21 சதவிகிதம் வரை உயர்த்தியது. இந்தியாவின் முக்கியமான இரு தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

அதன்படி, 28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவுடன், அளவற்ற கால் வசதி, 300 எஸ்.எம்.எஸ். கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 179 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக உயர்த்தப்பட்டது .84 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டா, அளவற்ற கால் வசதி, 30 எஸ்.எம்.எஸ். கொண்ட ரீசார்ஜ் கட்டணம் 459 ரூபாயில் இருந்து 509 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. மேலும், பல்வேறு ரீசார்ஜ் கட்டணத்தையும் வோடபோன் ஐடியா உயர்த்தியது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் முற்றிலும் புதிய திட்டம் ஆகும். இதன் வேலிடிட்டி 45 நாட்கள் நீடிக்கும். இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச அன்லிமிடெட் அழைப்பு. மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி பயன்படுத்தலாம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் என்று அறிவித்துள்ளது.

 

Related posts

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்: 6 பேர் கைது

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்