ப்ராக்கோலி கபாப்

தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி – 3 கப் சீஸ் – 1 கப் (துருவியது)
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
முட்டை – 2
பிரட் தூள் – 1 கப்
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் அதில் ப்ராக்கோலியை சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து, பின் நீரை வடிகட்டி ப்ராக்கோலியைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ப்ராக்கோலியைப் போட்டு, அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, சீஸ், மிளகுத் தூள், பிரட் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஓரளவு தட்டையாக தட்டிப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.இப்படி அனைத்தையும் பொரித்து எடுத்தால், ப்ராக்கோலி கபாப் ரெடி!!!

Related posts

வெள்ளை வெஜிடேபிள் குருமா

பருப்பு கீரை கிச்சடி

ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி