லஞ்ச பணத்தை பங்கு போட்ட ED அதிகாரிகள் யார், யார்? : அங்கித் திவாரியிடம் 2-வது நாளாக விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 2-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. அங்கித் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிச.1-ம் தேதி பிடிபட்டார். அரசு மருத்துவரிடம் லஞ்சம் கேட்டபோது உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என அங்கித் திவாரி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. அங்கித் திவாரி கூறிய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் யார், யார் என்பதை கண்டறிய என போலீஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், மருத்துவரிடம் பெற்ற லஞ்சப் பணத்தை பங்கு போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குறித்தும் அங்கித் திவாரியிடம் சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி