செங்கல்பட்டில் சாலை அமைக்கும் பணியின்போது பைப்லைன் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்..!

  • வாகன ஓட்டிகள் அவதி
  • சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு‌: செங்கல்பட்டில் சாலை பணியின்போது உடைந்த பைப்லைனால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில், கழிவுநீர் கால்வாய்க்கு மேல் சாலையில் இருபுறமும் பாலம் அமைக்கும் பணி கடந்த 5 மாதத்திற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சாலையில் இரண்டு பள்ளிகள், சார் பதிவாளர் அலுவலகம், சினிமா தியேட்டர் அமைந்துள்ளது.

மிக முக்கியமாக இந்தபாலம் கட்டுமிடத்தை ஒட்டியே தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. மேலும், இருபுறமும் நத்தம் மற்றும் ஜேசிகே நகருக்கு செல்லும் குறுக்கு சாலைகள் அமைந்துள்ளது. இந்த முக்கிய சாலை வழியாக கல்பாக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் தொடர்ந்து சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடிய இந்த சாலையில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக மெத்தன போக்கில் ஆமை வேகத்தில் பணி நடந்து வந்தது. கால்வாய் மூடப்பட்டு சாலையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் தார்சாலை அமைத்துத்தராமல் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதோடு, கடந்த ஒரு வாரகாலமாக, பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஆறாக ஓடி வருகிறது.

அதனால், சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை ஓட்டமுடியாமல் தடுமாறி தொடர்ந்து கீழே விழுந்து காயப்பட்டு வருகிறார்கள்.ஆகையால், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக உடைப்பு ஏற்பட்ட பைப்லைனை சீர் செய்து சாலையில் தண்ணீர் வராமல் தடுத்து, குண்டும் குழியுமாக உள்ள தார்சாலையை மீண்டும் புதியதாக அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி