ரூ.5,000 லஞ்சம் விஏஓ கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த ராகவன் மகன் பார்த்திபன். பிஇ பட்டதாரியான இவரது பொக்லைனை வாடகைக்கு எடுத்த ரங்கசாமி என்பவர் விற்றுவிட்டார். பார்த்திபன் அளித்த புகாரின்பேரில், பொக்லைனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பொக்லைனை மீட்க நீதிமன்றத்தில் சொத்து மதிப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6ம்தேதி விண்ணப்பம் செய்தார். இதற்காக கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் (48) ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை ஆலோசனையின் பேரில் விஏஓ அமீர்கானிடம் ரூ.5 ஆயிரத்தை பார்த்திபன் கொடுத்தபோது, போலீசார் விஏஓவை கைது செய்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி