லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ, காவலர் அதிரடி சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

திருச்சி: திருச்சி அடுத்த திருவெறும்பூர் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணசாமி. காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும், காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஜெயக்குமாரிடம் ஜாதி ரீதியாக செயல்பட்டதாகவும் எஸ்.பி வருண்குமாருக்கு புகார் வந்தது.

விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணசாமியை நேற்றுமுன்தினம் சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய காவலர் சத்யராஜ் புகார் கொடுக்க வந்த பெண்ணை தாக்கியதாக கூறப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதே போல் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தர், ஜாதி ரீதியாக செயல்பட்டதாக புகாரின்பேரில் அவரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார்.

Related posts

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சு