ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைதானவர் மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் ஓட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் கட்டப்ட்டுள்ள புதிதாக திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக மண்டப மேலாளர் துரைராஜ், பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு தடையின்மை சான்று வழங்க நேற்று முன்தினம் துணை தாசில்தார் பழனியப்பன்(49), ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது விஏஓ நல்லுசாமி (42) உடன் கைது செய்யபட்டார்.

அப்போது துணை தாசில்தார் பழனியப்பன் மயக்கம் வருகிறது, நெஞ்சு வலிக்கிறது என கூறவே, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரவில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சையிலிருந்த பழனிப்பனை திடீரென காணவில்லை. உடனே போலீசார், பழனியப்பனை தேடி நாரணமங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு ெசன்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ராஜ்கோட்டில் 27 பேர் பலியான தீவிபத்து மாநகராட்சி மாஜி அதிகாரி வீட்டில் ரூ.19 கோடி தங்கம், பணம் பறிமுதல்

அம்ரித் பாரத் திட்டத்தில் கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு: செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்