ரூ.2 ஆயிரம் லஞ்சம் சத்துணவு பிரிவு உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

திருப்பூர்: திருப்பூர் ஜீவா நகர் சலவை பட்டறை வீதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சுகந்தி. திருப்பூர் 15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2014 நவம்பர் மாதம் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். தமிழ்நாடு அரசின் குடும்ப நலநிதி ரூ.1.5 லட்சம் பெறுவதற்காக மாநகராட்சி சத்துணவு பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அதை பரிசீலனை செய்வதற்காக சத்துணவு பிரிவு உதவியாளர் சுகுணா (64), முத்துவிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை விசாரித்து, சுகுணாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி