எதிர்க்கட்சிகளை உடைக்கிறார்கள் பாஜவுக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை: பிருந்தா காரத் சொல்கிறார்

தும்கா: மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கை இல்லாததால் தான் பா.ஜ எதிர்கட்சிகளை உடைக்கிறது என்று பிருந்தாகாரத் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் இதுகுறித்து கூறியதாவது; வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ கூட்டணி 400க்கும் மேல் இடங்களை வெல்லும் என்று பிரதமர் மோடியே நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகளை உடைக்கும் வேலைகளை பா.ஜ செய்து வருகிறது.

எதிர்க்கட்சி முகாமை உடைப்பதில் உலகின் நம்பர் 1 கட்சியாக பா.ஜ மாறியுள்ளது. பாஜவுக்கு தன் மீது நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை பணத்தால் கவர்ந்து, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து, பொய் வழக்குகளில் சிக்க வைத்து, ஜனநாயக விதிகளை மீறி, எதிர்க்கட்சித் தலைவர்களை கம்பிக்குப் பின்னால் அனுப்புகின்றனர். அரசியலமைப்பை பா.ஜ ஐசியூவில் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு