சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

திருத்தணி: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரை ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் சேர்ந்த முகேஷ்(24). இவரும் அந்த இளம் பெண்ணும் உறவினர்கள். இந்நிலையில், முகேஷ் அடிக்கடி அந்த கிராமத்திற்கு செல்வது வழக்கம்.

அப்போது, முகேஷுக்கும் அந்த இளம் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முகேஷ் அந்த சிறுமி காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி, 16 வயது சிறுமியை, முகேஷ் அழைத்த இடத்திற்கெல்லாம் சென்றுள்ளார். அப்போது, முகேஷ் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது