ஆசை வார்த்தை கூறி பெண்ணை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டம், ஜூலை 31: ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் நடுத்தெருவில் சின்னதுரை மகன் ராஜவேல் (31) இவர் டிப்ளமோ படித்துள்ளார். அதே தெருவில் வசித்த பி.லிட் படித்த பாண்டியன் மகள் நதியா (21) என்பவரை கடந்த சில வருடங்களாக திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்துள்ளார்.இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வது பற்றி வீட்டில் பேசிய போது, இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜவேல் குடும்பத்தினர் வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்துள்ளனர்.இதுகுறித்து நதியா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை சில வருடங்களாக ஏமாற்றி காதலித்து வந்தவர் தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிடுகிறார் எனக் கூறி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ராஜவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்