தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதை பழுது

*சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதை பழுதடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இவர்களில் பலர் சேரிங்கிராஸ், கமர்ஷியல் சாலை, கலெக்டர் அலுவலகம் போன்ற பகுதிகளில் இருந்து நடந்து செல்கின்றனர்.

இவர்கள் பூங்காவிற்கு செல்லும் வகையில் பூங்கா செல்லும் சாலையோரங்களில் இரு புறங்களிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதையையே சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பூங்கா செல்லும் நடைபாதைகளில் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இன்டர்லாக் கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால், நடைபாதையில் சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பூங்காவிற்கு செல்லும் ஆர்வத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இந்த பள்ளங்களை கவனிக்காமல் செல்லும்போது தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, மாலை நேரங்களில் இந்த நடைபாதையில் செல்லும்போது பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி இந்த நடைபாதையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா