தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பாத்திகளில் மேரிகோல்டு மலர் செடி நடவு பணிகள் தீவிரம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இருந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருகின்றனர். இதனால் இவர்களை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும். ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் முன்னதாக மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும்.

அவைகளில் ஏப்ரல் மாதம் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் தோட்டக்கலைத் துறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி மட்டுமே நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டால், மற்ற கண்காட்சிகளையும் நடத்த வாய்ப்புள்ளது. எனினும், ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா தற்போது மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. பூங்கா முழுவதிலும் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பிரமிளா வகை மலர் செடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தை மலர் செடிகள் அகற்றப்பட்டு தற்போது அங்கு மேரிகோல்டு மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை ெதாழிலாளர்கள் ஈடுபட்டனர். இச்செடிகளில் அடுத்த மாதம் மலர்கள் பூக்க வாய்ப்புள்ளது. தேர்தல் முடிந்த கையோடு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.