எல்லை பாதுகாப்பு படையில் 162 கான்ஸ்டபிள்/ எஸ்ஐக்கள்

பணியிடங்கள் விவரம்

i) SI (Master): 7 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1)
ii) SI (Engine Driver): 4 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1)
iii) Head Constable (Master): 35 இடங்கள் (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்- 11, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-6)
iv) HC (Engine Driver): 57 இடங்கள் (பொது-25, பொருளாதார பிற்பட்டோர்-11, ஒபிசி-13, எஸ்சி-2, எஸ்டி-6)
v) Mechanic (Diesel/Petrol Engine): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்டி-1)
vi) HC (Electrician): 2இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
vii) HC (AC Technician): 1 இடம் (எஸ்சி)
viii) HC (Electronics): 1 இடம் (ஒபிசி)
ix) HC (Machinist): 1 இடம் (ஒபிசி)
x) HC (Carpenter): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
xi) HC (Plumber): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
xii) Constable (Crew): 46 இடங்கள் (பொது-16, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-15,எஸ்சி-8, எஸ்டி-4).

மேற்குறிப்பிட்ட 162 இடங்களில் 16 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்: எஸ்ஐ பணிக்கு ரூ.34,500- 1,12,400. ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.25,500-81,100. கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.21,700-69,100.

வயது: எஸ்ஐ பணிக்கு 22 முதல் 28க்குள். இதர பணிகளுக்கு 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:
1. எஸ்ஐ (மாஸ்டர்): பிளஸ் 2 தேர்ச்சியுடன் உள்ளூர் நீர்வழி போக்குவரத்து டிரைவர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. எஸ்ஐ (இன்ஜின் டிரைவர்): பிளஸ் 2 தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. ஹெட் கான்ஸ்டபிள் (மாஸ்டர்/இன்ஜின் டிரைவர்): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Serang பணிக்குரிய சான்றிதழ் அல்லது இன்ஜின் டிரைவர் பணிக்குரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
4. ஹெட் கான்ஸ்டபிள் (வொர்க்‌ஷாப்): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் (Crew) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 265 குதிரைத் திறன் கொண்ட ‘போட்’ ஓட்டுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 160 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.எல்லை பாதுகாப்பு படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, தொழில்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையி்ல் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். உடல்திறன் தேர்வில் 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

கட்டணம்: எஸ்ஐ பணிக்கு ரூ.200/-. . இதர பணிகளுக்கு ரூ.200/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.2024.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை