எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு பாக். தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ராணுவ வீரர் பலி: கேப்டன் உட்பட 4 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்த ஆண்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 22 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் கமாகரி செக்டாரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் ஊடுவ முயன்றனர். அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். 2 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தப்பி ஓடினர்.

இவர்கள் பாகிஸ்தான் எல்லை செயல் குழுவை (பிஏடி) சேர்ந்தவர்கள் என ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில் பாகிஸ்தான் வீரர்களும், தீவிரவாதிகளும் இருப்பார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் வீரர் மோகித் ரத்தோர் வீரமரணம் அடைந்தார். கேப்டன் உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, 2,000 வீரர்கள் கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர் 2 குழுவினர் ஒடிசாவில் இருந்து ஜம்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

3 தீவிரவாதிகள் தலைக்கு ரூ.15 லட்சம்: தோடாவில் கடந்த 16ம் தேதி நடந்த என்கவுன்டரில் கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 49 நாட்களில் 15 பேர் வீர மரணம்; பிரியங்கா காந்தி ஆவேசம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,’ கடந்த 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 15 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் ’ என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது