எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளம் கிராமத்தை சேர்ந்த அரசின் ஒத்துழைப்போடு விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வரும் அந்தோணி மகாராஜா, அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜூலை மாதம் 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்தத்க்கடலுக்கு சென்ற 22 மீனவர்களை இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்ததுடன் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை, வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்