எல்லை பாதுகாப்பு படையில் ‘ஏர் கிராப்ட்’ இன்ஜினியர்

எல்லை பாதுகாப்பு படையில் ‘ஏர் கிராப்ட்’ இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Aircraft Maintenance Engineer
i) Mechanical (Mi-17): 1 இடம் (பொது)
ii) Avionics (Mi-17): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
iii) Mechanical (ALH-Dhrur): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
iv) Avionics (Fixed Wing): 2 இடங்கள் (பொது)

வயது: 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 வருட தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.67,700- 2,08,000.

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ‘ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியர்ஸ்’ உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம்- ஆண்கள்-165 செ.மீ., பெண்கள்-157 செ.மீ., எடை: ஆண்கள் 50 கிலோவிற்கும், பெண்கள் 46 கிலோவிற்கும் குறையாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பளவு 81 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., என்ற அளவிலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. http://rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.06.2024.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது