பூநீறை பாதுகாக்கக் கோரி மனு: அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தமிழ் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பூநீறை முறையாக பாதுகாக்க உத்தரவிடக் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டுமே பூநீறு கிடைக்கிறது. தமிழ் சித்த மருத்துவத்தில் மட்டுமே பூநீறை மருந்தாக பயன்படுத்தும் முறை காணப்படுகிறது. தற்போது மீதமிருக்கும் பகுதிகளையும் காக்கத் தவறினால் பூநீறு கிடைக்காத நிலை உருவாகும் என கூறி விருதுநகரைச் சேர்ந்த மருத்துவர் மணிகண்டன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை