பள்ளிகளில் மாதம் ஒருநாள் புத்தக பை இல்லா தினம்: புதுச்சேரி கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: புதுவையில் உள்ள பள்ளிகளில் மாதத்தில் ஒரு நாள் புத்தக பை இல்லா தினம் கடைபிடிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி கல்வித்துறை ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, கல்வித்துறை செயலர் ஜவஹர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடை வழங்குதல், நீட் பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் தமிழிசை பேசுகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்களை சந்திக்கும் வகையில் ஆசியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாதத்தில் ஒரு நாள் புத்தக பை இல்லாத தினம் (NO BAG DAY) கடைபிடிக்க வேண்டும். அந்த நாளில் கைவினை, கலை, விளையாட்டு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். படிப்பை தொடர முடியாத இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும் அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து “மாணவர்கள் தினம்” கொண்டாடப்பட வேண்டும் என்றார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்