தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு கூடான டிரான்ஸ்பார்மர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டிரான்ஸ்பார்மர் அடியில் உடைந்து எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் கிராமம்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தெருவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்குள்ள, டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்து உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பத்தில் இருந்து தென்மேல்பாக்கம் மற்றும் வீராபுரம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலின்போது பலத்த காற்று வீசியது. அப்போது, இந்த மின் கம்பம் சேதமடைந்துள்ளது. எப்போது, மின் கம்பம் உடைந்து டிரான்பார்மர் கீழே விழுமோ என்ற அச்சத்தில் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

எனவே, மிகவும் ஆபத்தானநிலையில் மின் கம்பத்தின் அடியில் உடைந்து சிதறி கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவுக்கு கிடக்கும் தென்மேல்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும். உடைந்து எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்சார கம்பத்தை மாற்றவில்லை என்றால் மிக பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!