பொக்லைன் இயந்திரத்தில் சென்று கர்ப்பிணியை மீட்ட அமைச்சர் எ.வ.வேலு: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த வீடியோ வைரல்

சென்னை: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி கடந்த 2 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த கர்ப்பிணி பெண்ணை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொக்லைன் இயந்திரத்தில் சென்று மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து கர்ப்பிணி பெண் கூறுகையில், கடந்த இரண்டு நாட்கள் வீடு முழுவதும் மழை நீர் தேங்கியிருந்ததால் வெளியில் வர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தோம். அதன் பிறகு அமைச்சர் எ.வ.வேலு தான் கொண்டு வந்து எங்களை மீட்டு, சாப்பாடு கொடுத்து இப்போது இங்கு பத்திரமாக வைத்திருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். இங்கு வந்ததால் ஏதாவது நிவாரண முகாம் இருக்கும், நாங்கள் பத்திரமான இடத்திற்கு சென்று விடலாம் என்று நம்பிக்கை வந்துள்ளது. மேலும் அவசரமான நிலையில் பொக்லைனில் வந்தது எனக்கு பெரிய பிரச்னையாக தெரியவில்லை. நல்ல படியாக வந்து சேர்ந்து விட்டோம். ரோட்டுக்கு வந்ததே எங்களுக்கு பெரிசாக தான் இருக்கிறது. எங்களுடைய உடைமைகளை பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்துள்ளோம். என்னுடன் அம்மா, தங்கச்சியையும் கூட்டுக் கொண்டு வந்து விட்டேன். எங்களை பத்திரமாக அழைத்து வந்ததற்கு அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்