வாஷிங்டன்: போயிங் 737-9 மேக்ஸ் விமானம் நடுவானில் சென்றபோது திடீரென கதவு கழன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட அடுத்த சில நொடிகளில் நடுவானில் கதவு கழன்று பறந்ததால் பயணிகள் அலறினர். போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் கதவு கழன்று பறந்ததை அடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் போர்ட்லேண்ட்டில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு விமானம் புறப்பட்டபோது விபரீதம் நிகழ்ந்தது.