எஸ்.டி உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாற்ற உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சேலம் மாவட்டம், அடிமலையப்புதூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர் நிலை பள்ளியில் கடந்த மாதம் பழங்குடியினர் நல இயக்குநர் மற்றும் சேலம் மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வில், அந்த பள்ளியில் 6 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 4 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதைகவும் தெரியவந்தது.

8ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 9ம் வகுப்பில் சேர இடம் வழங்கப்படவில்லை. மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் சேலம் மாவட்டம் ஓடைக்காட்டுபுதூர், கொடுங்கல், இராமன்பட்டி ஆகிய அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் முறையே 135, 102 மற்றும் 75 மாணவர்கள் கல்வி கற்று வருவருகிறார்கள். இதையடுத்து, அந்த பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஓடைக்காட்டுபுதூர் பள்ளிக்கு மணிவண்ணன் என்ற பட்டதாரி ஆசிரியரையும், கொடுங்கள் பள்ளிக்கு அலமேலு என்ற பட்டதாரி ஆசிரியரையும், இராமன்பட்டி பள்ளிக்கு மணிகண்டன் என்ற ஆசிரியரையும் இடமாற்றம் செய்து பழங்குடியினர் நல இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணையின்போது, மாணவர்களின் நலன் கருதியே இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு