கோடை கால மின்தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது வாரியம்

சென்னை: கோடை கால மின் தேவைக்காக மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு டிச.1ம் தேதி முதல் வரும் பிப்ரவரி மாதம் வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆயிரம் மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2,200 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபரில் மின்வாரியம் டெண்டர் கோரியது.

இந்நிலையில், வரும் ஏப்.1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மற்றும் நாள் முழுவதும் கூடுதல் மின்சாரம் செய்வதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்காக மார்ச் முதல் மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2 ஆயிரம் மெகாவாட்டும், 2024 ஏப்ரல் மாதம் மட்டும் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஏற்கனவே டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கோடை காலங்களில் அதிகப்படியான மின் பயன்பாடு இருக்கும் . அதற்காக மின்சாரம் கொள்முதல் செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிற மற்ற மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்கும்.

Related posts

அமராவதி முதலை பண்ணைக்குள் சுற்றுலா பயணி தொலைத்த 3 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள்

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்