பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எம்40ஐ

பிஎம்டபிள்யூ நிறுவனம், எக்ஸ்4 எம்40ஐ  என்ற புதிய எஸ்யுவி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது லிமிடெட் எடிஷன் என்பதால், பிஎம்டபிள்யூ இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்தக் காரில் 3.0 லிட்டர் டர்போ இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 360 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 4.9 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லும். இதில் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பமும் உள்ளது.

4 டிரைவிங் மோட்கள் உள்ளன. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லாம்ப்கள், கருப்பு நிற கிரில் பிளேட், டூயல் டோன் இன்டீரியர், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.96.2 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்