பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய ஜி310 ஜிஎஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக சிவப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கில் 313 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்-ல் 33.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய வாகன விதிகளுக்கு ஏற்ப, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வகையில் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, எல்இடி ஹெட்லைட்டுகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர், ஏபிஎஸ், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர்கள் இடம் பெற்றுள்ளன. பைக்கின் எடை 175 கிலோ. ஷோரூம் விலையாக சுமார் ரூ.3.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக், கேடிஎம்250 அட்வென்சர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு