பிஎம்டபிள்யூ நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் எல்டபிள்யூபி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 256 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. மைல்டு ஹைபிரிட் வேரியண்டாக இது வெளிவந்துள்ளது. பனேரமிக் சன்ரூப், பேவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், இன்டீரியர் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், போன் மிரரிங், 360 டிகிரி கேமரா, டிரைவர் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.72.90 லட்சம்.
பிஎம்டபிள்யூ 5
previous post