பாமகவுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை ராமதாஸ் வேதனை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக 36ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் ராமதாஸ் அளித்த பேட்டி: பாமக தொடங்கி ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. அதில் சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் இந்த மூன்று கொள்கைகளின்படி, சமூக ஜனநாயகம் என்கின்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக பாடுபட்டு வருகின்றோம். தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் பாமகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் எந்த பிரச்னையானாலும் குரல் கொடுக்க என்னிடம் தான் வருகின்றார்கள். அதற்காக போராடுகிறேன். அறிக்கை வெளியிடுகிறேன். ஆனாலும் மக்கள் என் பின்னாலே முழுவதும் வர மறுக்கிறார்கள். தயங்குகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு மொத்தமாக பாமகவின் பின்னால் வருவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

குத்தகை ரத்து: ரேஸ் கிளப் நிர்வாகம் ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல்

திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாளும் அனைத்து சிறப்பு சேவையும் ரத்து: கூடுதல் செயல் அதிகாரி தகவல்

அக்.2ம் தேதி வரை புதுக்கோட்டை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்!!