பிளவுஸ்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

இதோ இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் டிசைன்கள் என்னென்ன ஒரு ஷார்ட் ஸ்வீட்& பட்டியல்.

முடிச்சு பிளவுஸ்
இந்த பிளவு டிசைனை படங்களில் நடிகைகள் அதிகம் அணிந்து பார்த்திருப்போம். இந்த பிளவுஸின் பின்புறத்தில் கொக்கி இருக்காது. அதற்கு பதில் முடிச்சு போட வேண்டும். அந்த முடிச்சை பலவகைகளில் வெவ்வேறு விதமாகவும் போடலாம். தற்போது இந்த டிசைன் இளம் வயது பெண்களால் அதிகம் விரும்பப்படுகிறது. பொதுவாக இவை அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் உடைகளில் இருந்து மறுவி வந்தவை.

குறுக்கு வெட்டு மாடல்
பிளவுஸின் பின்புறம் கயிற்றாலேயே க்ரிஸ்கிராஸ் பாணியில் டிசைன் செய்யப்படும் பிளவுஸ்கள். குறுக்குவெட்டு மாடல் லுக் வெஸ்டர்ன் புடவை மற்றும் லெஹங்கா டிசைன்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.

ஒன் ஷோல்டர் டிசைன்
ஒன் ஷோல்டர் டிசைன் சமீபத்திய ட்ரெண்டிங் பிளவுஸில் இடம் பெற்றுள்ளது. இந்த வகையான பிளவுஸ் டிசைனர் புடவை மற்றும் லெஹங்கா இரண்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.

பேக்லெஸ் லேன்யார்ட்
கிட்டத்த மொத்த பிளவுஸும் ஒன்று அல்லது இரண்டு கயிற்றில் நிற்கும்விதமாக டிசைன் செய்யப்பட்டவை. இவைகள் ஜியார்செட், சிஃபான், உள்ளிட்ட புடவைகளுக்கு மிகச் சரியாக பொருந்தும்.

பட்டர்ஃபிளை மாடல்
இந்த பிளவுஸ் டிசைன் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு நீங்கள் பிளவுஸ் தைக்கும் போது பட்டர்ஃபிளை கட் என்று சொன்னால் போதும். டிசைனர் கச்சிதமாக வடிவமைத்து கொடுப்பார்கள். இது போல பல வகையான ட்ரெண்டிங் பிளவுஸ் டிசைன்கள் தற்போது பெண்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

போட் நெக் பிளவுஸ்
இந்த காலத்திற்கு ஏற்ப ட்ரெண்டிங்காகவும், கவர்ச்சியாகவும் பிளவுஸ் டிசைன் அணிய விரும்புவர்கள் இந்த போட் பிளவுஸ் மாடலை தேர்வு செய்யலாம். அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மேலும் ஆசிரியர்கள் என அதிகம் தேடித் தேடி டிசைன் செய்துகொள்ளும் டிசைன்கள் இவை.
– கவிதா பாலாஜிகணேஷ்

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு