இலவச ரத்த பரிசோதனை மருத்துவ முகாம்: அண்ணா டவரில் நடைபயிற்சி மேற்கொண்ட அனைவரும் கலந்து கொண்டனர்

சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா நகர் அண்ணா டவரில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இலவச சக்கரை நோய் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

சென்னை பிரசித்தி பெற்ற ஆண்டரசன் மருத்துவமனை மூலம் மருத்துவர் ஸ்ரீனிவாசரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அண்ணா டவர் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த இலவச மருத்துவ முகாம் அமைந்தது

அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் இலவச இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதோடு, சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களும் இந்த முகாமில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன

இந்த இலவச முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும் மற்றும், சர்க்கரை நோய், சர்க்கரை அழுத்தம், ரத்த பரிசோதனை உள்ளிட்டவை கேட்டு பெற்று தெரிந்து கொண்டனர். மேலும், சர்க்கரை நோய் மற்றும் இரத்த பரிசோதனை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்களும் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்