நிலக்கோட்டை பகுதியில் கண்டாலே நாவூறும் கருப்பு பன்னீர் திராட்சை மகசூல் சூப்பர்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

 

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் நாட்டு திராட்சை எனப்படும் கருப்பு பன்னீர் திராட்சை நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இப்பகுதியில் விளையும் திராட்சைக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி, செட்டியபட்டி, முருகன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, ஜல்லிக்கட்டு காமலாபுரம், கொடைரோடு, பள்ளப்பட்டி, மைக்கேல்பாளையம் ஆகிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கருப்பு பன்னீர் திராட்சை எனப்படும் நாட்டுத் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த இராண்டு ஆண்டுகளாக பருவமழை, கோடைமழை சரியான நேரத்தில் அதிகமாக பெய்ததால், இந்தாண்டு சாகுபடி பரப்பை விவசாயிகள் அதிகரித்துள்ளனர். இதனால், சரியான நேரத்தில் மழை பெய்ததால், தோட்டங்களில் கருப்பு பன்னீர் திராட்சை பழங்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. கண்டாலே நாவுறும் விதத்தில் கொத்து கொத்தாக பழங்கள் தொங்குகின்றன. மேலும், சிறுமலை பகுதி திராசைக்கு நல்ல மவுசு இருப்பதால், கேரள உள்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா