கருப்பின சிறுவன் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து பிரான்சில் 3வது நாளாக வன்முறை, கலவரம்: 200 போலீஸ் காயம், 600 பேர் கைது

நான்டெர்(பிரான்ஸ்): பிரான்சில் 17 வயது கருப்பின சிறுவனை காவல்துறை சுட்டு கொன்றதை கண்டித்து 3வது நாளாக நடந்த போராட்டத்தில் 200 போலீசார் காயமடைந்தனர். 600 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிசின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டதில் காரை ஓட்டி வந்த கருப்பின சிறுவன் நேல்(17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த 40,000 காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புறநகர்ப் பகுதியான கிளாமர்ட் பகுதியில் வரும் திங்கட்கிழமை வரை, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை