இந்தியா கூட்டணியின் உறுதியால் ஜார்க்கண்ட் அரசை திருடும் பாஜவின் சதி முறியடிப்பு: ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

கோட்டா: ஜார்க்கண்ட் அரசை பாஜ திருட முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கு வங்கத்தில் இருந்து பாகூர் மாவட்டம் வழியாக ஜார்க்கண்டில் நுழைந்தது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவி ஏற்றுள்ளார்.

அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் காலதாமதம் ெசய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் கோட்டா மாவட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ‘‘ஜார்க்கண்ட் மாநில அரசை பாஜ திருடுவதற்கு முயற்சித்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசை காங்கிரஸ் பாதுகாத்தது. பாஜவின் கொள்கைகளை எதிர்த்து நின்று அதன் சதியை காங்கிரஸ் உறுதியோடு முறியடித்தது”என்றார். அதன் பின்னர் தியோகர் சென்ற ராகுல் காந்தி அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.

 

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்