டெல்லி: பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் பயணத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் முயற்சி செய்து வருகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் சந்திக்கிறார்.