பட்ஜெட் நிதியை பாஜ அபகரிக்கிறது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒன்றிய அரசு அபகரித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டர் பதிவில், “ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவீதத்தை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒன்றிய தகவல் தொடர்பு பணியகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை விளம்பரத்துக்காக பாஜ அரசு அபகரிக்கிறது. இதனால் பட்ஜெட்டின் புனிதத்தன்மை கெட்டு விட்டது. இது முறைகேடு இல்லையா? பொதுவாக இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவார்கள். தற்போது ஒன்றிய அரசு மோடியின் பிரசார இயந்திரமாக மாறி விட்டது” என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Related posts

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை