பாஜ கூட்டணியில் சேர முயற்சித்த சந்திரசேகரராவ்: நிஜாமாபாத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

திருமலை: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்ற பிறகு டெல்லி வந்த முதல்வர் சந்திரசேகரராவ் என்டிஏ கூட்டணியில் சேருவதாக கேட்டுக்கொண்டார் என்று நிஜாமாபாத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். தெலங்கானா மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நிஜாமாபாத்தில் நேற்று நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ‘ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்ற பிறகு டெல்லிக்கு வந்த முதல்வர் சந்திரசேகரராவ் என்டிஏ கூட்டணியில் சேருவதாக கேட்டுக் கொண்டார். மேலும் தனக்கு பிறகு தனது மகன் கே.டி.ராமாராவ் முதல்வராக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு நான், ‘இது ஜனநாயக நாடு. முதல்வர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை தெலங்கானா மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல’ என்று கூறினேன்.

அதன்பிறகு கேசிஆர் எனது எதிரில் கூட முகம் காண்பிக்கவில்லை. தெலங்கானா மக்களிடம் கேசிஆர் குடும்பம் பொய் சொல்கிறது. இதுதான் கே.சி.ஆரின் உண்மை வடிவம். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்வதற்காக தெலங்கானா மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கேசிஆர் பயன்படுத்தியுள்ளார். என்னை நம்பி ஒருமுறை வாய்ப்பு தந்தால் தெலங்கானா முற்றிலும் மாற்றப்படும். ஐந்தாண்டுகளில் பிஆர்எஸ் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த அனைத்தையும் மக்களுக்கு கொடுப்பேன். நாடு மட்டுமின்றி தெலங்கானாவிலும் இரட்டை இயந்திர ஆட்சியால் மட்டுமே அனைத்து நலனும் பெற்று மாநில வளர்ச்சி சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது : ஐகோர்ட்

பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிப்பு

திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை