பாஜவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு அதிமுக மாநாட்டுக்கு ரூ.250 கோடி செலவு: டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி: ‘பாஜவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். அதிமுக மாநாட்டிற்கு ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது’ என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருச்சியில் அளித்த பேட்டி: நானும் ஓ.பி.எஸ்சும் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். பாஜ கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். சசிகலா தொண்டர்களுக்கு புதிய விடியல் ஏற்படும் என கடிதம் எழுதி உள்ளது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த காலத்தில் ஈட்டிய செல்வத்தை கொண்டு மதுரை மாநாட்டுக்கு மக்களை அள்ளி செல்லலாம் என பார்க்கிறார்கள். இதற்காக ரூ.250 கோடிக்கு மேல் மக்களுக்கு பணத்தை வாரி வழங்குகின்றனர். நாங்கள் உறுதியாக போராடி அதிமுகவை மீட்டெடுப்போம். அமமுக சார்பிலும் மாநாடு நடத்தப்படும். ஆனால் உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள். அப்பொழுது தெரியும் யார் உண்மையான தொண்டர்கள் என்பது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது