பாஜவுக்கு தொண்டர்கள் இரங்கல் போஸ்டர்

பாஜ கூட்டணியில் சிவகங்கை மக்களவை தொகுதி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தேவநாதன் போட்டியிடுகிறார். இதற்கு தொகுதியில் உள்ள பாஜ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காரைக்குடி முழுவதும் 3 போஸ்டர்களை வரிசையாக ஒட்டியுள்ளனர்.

அதில், ஒரு போஸ்டரில், ‘இரங்கலும்…பாராட்டுகளும்… சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பாஜவின் எளிய வெற்றியை எட்டாக்கனியாக்கிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைமைக்கு ஆழ்ந்த இரங்கலும்… பாராட்டுகளும்…’ என அச்சிடப்பட்டுள்ளது.

Related posts

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி