தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர் பங்காரு அடிகளார்: அண்ணாமலை பேட்டி

மேல்மருவத்தூர்: தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர் பங்காரு அடிகளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை; பங்காரு அடிகளாரின் மறைவால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே துயரத்தில் உள்ளது.

பட்டி தொட்டியெங்கும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். பெண்களுக்கு சமூக நீதியை, சம உரிமையை வழங்கியவர் பங்காரு அடிகளார். ஆன்மிக பணி மட்டுமல்லாமல், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியவர். பங்காரு அடிகளாரின் சேவையை பாராட்டி, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஆன்மீகவாதி. அம்மாவின் அறிவு முழு இந்தியாவிற்கே உதவியது.

அம்மாவின் மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றும் நாளையும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்