ஒரு போதும் பாஜவுடன் செல்ல மாட்டேன்: சரத்பவார் திட்டவட்ட மறுப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மகா விகாஸ் அகாடி கூட்டணியில், தேசியவாத காங்கிரஸ் இல்லாமல் காங்கிரசும், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியும் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் என்று வந்த தகவல்களில் உண்மை இல்லை. அஜித்பவாருடனான சந்திப்பு குடும்ப விஷயமானது. இதை அரசியலாக்காதீர்கள். நான் ஒரு போதும் பாஜ அணிக்கு போகவே மாட்டேன். 2024ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான அனைத்து வித முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கட்சி சின்னத்துக்கு உரிமை கோரிய விவகாரத்தில், தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளோம். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் 3 நிமிட வீடியோவை வெளியிட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு தனது நீண்ட பதிலில் மணிப்பூர் குறித்து சுருக்கமாகத்தான் குறிப்பிட்டார். அவர் ம.பி.யில் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றுவதையே அவர் விரும்பினார். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Related posts

எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!