பாஜவுக்கு மக்கள் கடிவாளம் போட்டு விட்டனர் இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்தனர். கடந்த 2019 தேர்தலை விட பாஜவுக்கு 63 இடங்கள் குறைவாக கிடைத்தது. இதன் மூலம் கடந்த காலங்களில் எதேச்சதிகாரமான முறையில் மோடி நாடாளுமன்றத்தில் செயல்பட்டதைப் போல இனியும் செயல்பட முடியாத அளவிற்கு மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள். இந்த தோல்விக்கு பிறகு 40 நாட்கள் கழித்து தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 2 இடங்களில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றிருக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில், பாஜவின் வாக்கு 35 சதவீதமாக குறைந்திருக்கிறது. எனவே பாஜவின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது.

Related posts

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது