பாஜ தேசிய செயலாளர் பதவி நீக்கம்

புதுடெல்லி: பாஜவின் தேசிய செயலாளரான மேற்கு வங்கத்தை சேர்ந்த அனுபம் ஹஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மக்களவை எம்பியும், பாஜவின் தேசிய செயலாளருமான அனுபம் ஹஸ்ரா கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடு குறித்து விமர்சித்து வந்தார். இந்நிலையில் பாஜ தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று முன்தினம் மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தனர். இதே நேரத்தில் கட்சியில் தேசிய செயலாளர் அனுபம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா