பாஜ எம்பியின் சர்ச்சை பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: சென்னையில் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி விட்டு, புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் என முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜ எம்பியுமான ஆனந்த் ஹெக்டே கூறியிருந்தார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜ எம்பியின் பேச்சை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரசார் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மோடி ஆட்சியை விரட்டுவோம், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்போவதாக மாநில தவைலர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்