கட்சிகளை உடைக்கும் வேலையை பாஜக செய்கிறது: ஹேமந்த் சோரன் பரபரப்பு குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் பாஜக உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். ஜார்கண்ட் மூத்த அமைச்சர்களில் ஒருவரான சம்பாய் சோரன் சில எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இந்த யூகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று டெல்லி சென்ற சம்பய் சோரன், நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தொடர்ச்சியான அவமதிப்பு காரணமாக தான் வேறு பாதையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது வாழ்க்கையில் புதிய பாதை தொடங்க உள்ளதாக கூறியுள்ள சம்பாய் சோரன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுதல் அல்லது தனிக்கட்சி தொடங்குதல் அல்லது இந்த பாதையில் ஒரு கூட்டாளியை கண்டுபிடித்தல் ஆகிய 3 தேர்வுகள் தமக்கு முன்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்பாய் சோரனை வரவேற்பதாக நேற்று ஜிதன் ராம் மஞ்சி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எனவே சம்பய் சோரன் விரைவில் பாஜகவில் சேரலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே சம்பாய் சோரனின் இந்த முடிவுக்கு பின்னால் பாஜக உள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். குடும்பங்களையும் காட்சிகளையும் உடைக்கும் வேலையை பாஜகவினர் பார்க்கின்றனர் என்று கூறினார்.

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்