பேரிடர் காலங்களில் மக்கள் பிரச்சனைக்காக பாஜக பாடுபட்டுள்ளது: அண்ணாமலை பேச்சு

சென்னை: பேரிடர் காலங்களில் மக்கள் பிரச்சனைக்காக பாஜக பாடுபட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைநிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது; பிப்ரவரி 28க்கு பின் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம். 2019 போலவே ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜகவில் 38 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் கடுமையான உழைப்பை செலுத்தி உள்ளோம்.

மக்கள் பிரச்சினைக்காக போராடி ஏராளமான நிர்வாகிகள் கைதாகி உள்ளனர். கொரோனா, மழை வெள்ளம் போன்ற காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக பாஜக பாடுபட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பாஜகவினர் வழங்கினர். தமிழகத்தில் பாஜக செய்து வரும் பணிகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் , பலதரப்பட்ட மக்களை சந்தித்துள்ளோம்.

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்