கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். நான் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் அடிக்கடி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பேன். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக மற்ற மாநில அரசுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது