150 தொகுதிக்கு பாஜ முதல் பட்டியல்: பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் பெயர் இடம் பெற வாய்ப்பு

புதுடெல்லி: ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரசியல் சதுரங்கத்தில் பாஜ காய்களை நகர்த்தி வருகிறது. மக்களவை தேர்தல் அட்டவணை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜ தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்காக வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் 7 முக்கிய மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் டெல்லியில் கட்சித் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, முதல் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி விரைவில் டெல்லியில் கூடுகிறது.

இதையடுத்து, 150 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பாஜ முதல் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த பட்டியலில், பிரதமர் மோடி(அயோத்தி), அமைச்சர்கள் அமித் ஷா(காந்தி நகர்), ராஜ்நாத் சிங்(லக்னோ), நிதின் கட்கரி(நாக்பூர்) மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம் பெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு