தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ மாவட்ட செயலாளர் கைது: போலீசார் நடவடிக்கை


சென்னை: பாஜ மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி என்பவர் கடந்த 26ம் தேதி அன்று அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தேர்தல் தலைமை பணிமனையில் அமர்ந்து கொண்டு பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாஜ கட்சியில் அண்ணா நகர் வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமாரை கண்ணத்தில் பாளர் என அறைந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பின்னர் தகராறில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்தபோது இருவரும் மாறி மாறி கொலை மிரட்டல் விடுவித்தனர். அதன் பின்னர் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு தனித்தனியாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் மூர்த்தி மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேர்தல் சுனக்கமாக பணியாற்றிய தொடர்பாக இருவருக்கும் இடையே வாட்ஸ் அப் குருப்பில் வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் வாட்ஸ் அப் கால் மூலமாக மூர்த்தியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மூர்த்தி ஆத்திரம் அடைந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுவித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று தகராறு சம்பந்தமாக அமைந்தகரை காவல் நிலையத்தில் ஆஜரான மூர்த்தி மீது 294 ஆபாசமாக பேசுதல் 323 கையால் தாக்கியது.

506 கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மூர்த்தியை அமைந்தகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பாஜ கட்சியை சேர்ந்த சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் அண்ணா நகர் மண்டல தலைவரை சரமாரியாக தாக்கிய வழக்கில் பாஜா மத்திய சென்னை வர்த்தக பிரிவு செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜ கட்சியில் பெரும் சசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை